/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீதிகளில் எறிந்து கிடக்கும் பெயர் பலகைகள் வீணாகும் மக்கள் வரிப்பணம்
/
வீதிகளில் எறிந்து கிடக்கும் பெயர் பலகைகள் வீணாகும் மக்கள் வரிப்பணம்
வீதிகளில் எறிந்து கிடக்கும் பெயர் பலகைகள் வீணாகும் மக்கள் வரிப்பணம்
வீதிகளில் எறிந்து கிடக்கும் பெயர் பலகைகள் வீணாகும் மக்கள் வரிப்பணம்
ADDED : நவ 10, 2024 04:15 AM

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகள் உள்ளன. இவற்றில் நுாற்றுக்கணக்கான ரோடுகள், வீதிகள், தெருக்கள் உள்ளன.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஏறத்தாழ 16.5 கோடி ரூபாய் மதிப்பில், சாலை குறியீடுகள், வீதிகளின் பெயர்ப்பலகைகள், வழிகாட்டிப் பலகைகள் அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. அவ்வகையில், பிரதான ரோடுகளில் உயரமான வழிகாட்டி பலகைகள், ரோடுகளின் பெயர்கள், ரோடு விவரங்கள், முக்கிய இடங்களின் பெயர்கள், ரோடு சந்திப்பு பகுதிகள் ஆகியவற்றைக் குறிப்பிடும் வகையிலான விவரங்கள் அடங்கிய பலகைகள் அமைக்கப்பட்டன.
இதில் முதல் கட்டமாக, நகரின் ஏ, பி மற்றும் சி ஆகிய பிரிவுகளாக அறிவிக்கப்பட்டு, முதல் கட்டத்தில், 7.7 கோடி ரூபாய் மதிப்பிலான பெயர்ப் பலகைகள் அமைக்கப்பட்டன. இப்பணிகள் முடிந்த பின் பிற பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில், வீதி பெயர்கள் கொண்ட பெயர்ப் பலகைகள் அமைக்கும் பணி துவங்கியது. இதில் 9.5 கோடி ரூபாய் மதிப்பில் ெபயர்ப் பலகைகள் உரிய இடங்களில் பொருத்தப்பட்டது.
இரண்டாம் கட்டத்தில் பொருத்தியவை பலகைகள், பல இடங்களில் சேதமடைந்தும், சிதிலமடைந்தும் காணப்படுகிறது. ஒரு சில ரோடுகளில் புதிய ரோடு அமைக்கும் பணி, குழாய் பதிப்பு பணி, வடிகால் அமைக்கும் பணி போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது, இது போன்ற பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்டன. சில இடங்களில் வாகனங்கள் மோதியும் சேதமடைந்தது.
இது போல் சேதமான பலகைகள் மீண்டும் சரி செய்யப்படவில்லை. கழற்றி வைக்கப்பட்ட பெயர்ப் பலகைகளும் மீண்டும் அமைக்கப்படாமல் ரோட்டோரத்தில் வீசப்பட்டு வீணாகக் கிடக்கிறது. இது போன்ற செயல்களால், மக்கள் வரிப்பணம் வீணாகிறது. பெயர்ப் பலகை இல்லாத நிலையில் புதிதாக வருவோர், முகவரி தேடி வருவோர் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சேதமான பெயர்ப் பலகைகளை சீரமைப்பு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.