/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இடம் பெயர்ந்த பூம்புகார் நகர் மக்கள் 11 ஆண்டாக நீக்கப்படாத பெயர்கள்
/
இடம் பெயர்ந்த பூம்புகார் நகர் மக்கள் 11 ஆண்டாக நீக்கப்படாத பெயர்கள்
இடம் பெயர்ந்த பூம்புகார் நகர் மக்கள் 11 ஆண்டாக நீக்கப்படாத பெயர்கள்
இடம் பெயர்ந்த பூம்புகார் நகர் மக்கள் 11 ஆண்டாக நீக்கப்படாத பெயர்கள்
ADDED : நவ 23, 2024 11:15 PM
திருப்பூர்: பதினோரு ஆண்டுகளுக்கு மேலாகியும், பூம்புகார் நகரில் வசித்த வாக்காளர் பெயர்கள், அறிவொளி நகருக்கு மாற்றப்படாமல், திருப்பூர் தெற்கு தொகுதியிலேயே நீடிப்பதாக, மா.கம்யூ., குற்றம்சாட்டியுள்ளது.
வாக்காளர் சுருக்கமுறை திருத்த பணிகள் குறித்து, தேர்தல் பார்வையாளர் (வாக்காளர் பட்டியல்) மகேஸ்வரி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளிலும், ஓட்டுச்சாவடிகளில் நடந்த சிறப்பு முகாம்களை பார்வையிட்டார். தேர்தல் பிரிவு அலுவலர் மற்றும் வாக்காளர்களிடம், இதுதொடர்பாக கேட்டறிந்தார்.
முன்னதாக, அரசியல் கட்சி பிரதிநிதிகளை, கலெக்டர் அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். கட்சியினர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
வடிவேல் (இ.கம்யூ.,)
வாக்காளர் பட்டியலை செம்மையாக தயாரிக்க, வீடு வீடாக கள ஆய்வு நடத்தப்பட வேண்டும்; ஒவ்வொரு ஆண்டும் கூறுகின்றனர்; ஆனால், கள ஆய்வு நடப்பதில்லை. குடிபெயர்ந்த வாக்காளர், இறந்த வாக்காளர் பெயர் நீக்கப்படாமல் இருப்பதால், ஓட்டுப்பதிவு திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளில் குறைகிறது. செம்மையான பட்டியலை தயாரிக்க வேண்டும். தேர்தல் பிரிவு அலுவலர்களை குறைகூறுவதாக கருத வேண்டாம். ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், முறையாக கள ஆய்வு செய்தாலே, ஆரோக்யமான பட்டியலை தயாரிக்க முடியும்.
ஜெயக்குமார் (மா.கம்யூ.,)
கலெக்டர் அலுவலக பணிக்காக, பூம்புகார் நகரில் வசித்த 150 குடும்பங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன. பெரும்பாலான குடும்பங்கள், பல்லடம் அறிவொளி நகரில் வசிக்கின்றன; சிலர் வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். சரியாக, 11 ஆண்டுகளுக்கு மேலாகியும், இங்கிருந்த வாக்காளர் பெயர், அந்தந்த தொகுதியில் உள்ள பகுதிகளுக்கு மாற்றப்படவில்லை. பலமுறை விண்ணப்பித்தும் மாற்றவில்லை. தேர்தலின் போது, பல்வேறு பகுதிகளில் இருந்து, வெகுதொலைவு வந்து ஓட்டளிக்க வேண்டியுள்ளது.
திருப்பூர் தெற்கு தொகுதி தேர்தல் பிரிவு அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்தி, பாகம் எண் 115 ல் உள்ள, வாக்காளர் பட்டியல் சரிபார்த்து; குடிபெயர்ந்த வாக்காளர் பெயரை நீக்கி, அந்தந்த தொகுதிகளில் சேர்க்க வேண்டும்.