ADDED : அக் 22, 2024 12:09 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவில்வழி பஸ் ஸ்டாண்டுக்கு நேற்று முன்தினம், 103ம் நம்பர் டவுன் பஸ் (டி.என்., 39 என் 0165) இயக்கப்பட்டது.
இரவு, 7:00 மணிக்கு புறப்பட்ட பஸ், தாராபுரம் ரோடு, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஸ்டாப்பில் நின்று புறப்பட்ட போது, பஸ்சின் நடுப்பகுதி, பின்புற இருக்கைகளுக்கு மேல் இருந்த விளக்குகள் எரியவில்லை; பயணிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் நடத்துனர் அமைதியாகிவிட்டார்.
பஸ் கோவில்வழிக்கு சென்று சேர்ந்து,மீண்டும் பழைய பஸ் ஸ்டாண்ட் வரும் வரை விளக்குகள் எரியவே இல்லை. இந்த மாதிரி பஸ்சில் ஏறினால், 'நமுத்துப்போன பட்டாசு' வாங்குன மாதிரி பயணிகள் முகம் சோர்ந்திடுமே!
