/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இருளில் மூழ்கிய நஞ்சப்பா பள்ளி ரோடு
/
இருளில் மூழ்கிய நஞ்சப்பா பள்ளி ரோடு
ADDED : மே 30, 2025 01:43 AM

திருப்பூர், ; மாநகராட்சி தெருவிளக்குகளை முறையாக பராமரிக்காததால், நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி வீதி இருள்சூழ்ந்து காணப்படுகிறது.
திருப்பூர் நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது; நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வீதி. காதர்பேட்டை, நேருவீதி, நடராஜா தியேட்டர் ரோடு, பார்க் ரோடு, ரயில்வே ஸ்டேஷன், ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கான இணைப்பு சாலையாக இந்த வீதி உள்ளது. நுாற்றுக்கணக்கான பனியன் வியாபாரிகளும் கடை வைத்துள்ளனர். அதிகாலை நேரம் முதல் நுாற்றுக்கணக்கானோர் பள்ளிக்கு உடற்பயிற்சிக்கு இந்த வழியாக வருகின்றனர். தினமும் ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் பயணிக்கும் சாலையாக இந்த சாலை உள்ளது.
இவ்வாறு முக்கிய பகுதியாக விளங்கும் நஞ்சப்பள்ளி ரோட்டில், உள்ள உயர்கோபுர மின்விளக்கு, தெருவிளக்குகளை மாநகராட்சி முறையாக பராமரிப்பதில்லை. இதனால், பெரும்பாலான நாட்களில் தெருவிளக்குகள் எரியாமல் வீதி முழுதும் இருள்சூழ்ந்து காணப்படும் நிலையே உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நஞ்சப்பா ஸ்கூல் வீதியை பார்வையிட்டு, எரியாத விளக்குகளை முழுமையாக மாற்றி புதிய விளக்கு அமைத்திட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது காதர்பேட்டை பனியன் வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.

