/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாராயணசாமி நாயுடுவை கொச்சைப்படுத்துவதா? கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அதிருப்தி

ADDED : பிப் 08, 2025 06:46 AM
பல்லடம்; ''விவசாய சங்க தலைவர் மறைந்த நாராயணசாமி நாயுடு பெயரை, ரோட்டில் கட்டப்படும் ஒரு பாலத்துக்கு வைப்பது, அவரது அரும்பணிகளை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது'' என, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதன் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது:
எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்தில், அமைச்சராக இருந்த சோமசுந்தரம், கோவை வேளாண் கல்லுாரி வளாகத்தில், நாராயணசாமி நாயுடுவின் சிலையை நிறுவ திட்டமிட்டு இருந்தார். ஆனால், நிறைவேறாமல் போனது.
தற்போது, நாராயணசாமி நாயுடு நுாற்றாண்டு விழா கொண்டாடப்படும் தருணத்தில், கோவை வேளாண் கல்லுாரியில் அவரது சிலையை வைத்திருந்தால், எதிர்கால தலைமுறைக்கு, இது போன்ற ஒரு தலைவர் வாழ்ந்தார் என்பதை நினைவு கூர்வதாக இருக்கும்.
இதை விடுத்து, கோவை குருடம்பாளையம் என்.ஜி.ஓ., காலனியில் உள்ள ரயில்வே பாலத்துக்கு நாராயணசாமி நாயுடு பெயரை வைப்பது, அவர் ஆற்றிய அரும்பணிகளை கொச்சைப்படுத்துவதாக உள்ளது.
இந்த அறிவிப்பை முதல்வர் ரத்து செய்ய வேண்டும். கோவை வேளாண் கல்லுாரியில், நாராயணசாமி நாயுடு சிலையை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வையம்பாளையத்தில் உள்ள நாராயணசாமி நாயுடு மணிமண்டபத்துக்குச் செல்லும் வழியில், அவரது நினைவாக நுழைவு வாயில் அமைக்கப்படும் என்பதை வரவேற்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.