/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அங்காளம்மன் கோவிலில் நாதஸ்வர இன்னிசை
/
அங்காளம்மன் கோவிலில் நாதஸ்வர இன்னிசை
ADDED : ஜூலை 25, 2025 11:31 PM

திருப்பூர்; திருப்பூர் முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவிலில், இசைப்பிரியர்களின் மெய்மறக்க செய்யும் வகையில், சிறப்பு இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
திருப்பூர் ரசிகமணி கந்தசாமி நினைவாக, ஆடி அமாவாசை தோறும், சிறப்பு நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி, நேற்று முன்தினம், இசை நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக, நாதஸ்வரத்தின் முக்கியத்துவமும், மகத்துவமும்' என்ற தலைப்பில், ஆசிரியர் கீதா பேசுகையில், ''இறைவன் இசை வடிவாக இருக்கிறார்; ஒவ்வொரு தெய்வத்தின் கரங்களில், பல்வகை இசை கருவி இருந்தாலும், நாதஸ்வரம் யார் கையிலும் இல்லை. ஏனெனில், நாதஸ்வரமே இறைவனின் அம்சமாக இருக்கிறது. நாதஸ்வரம், தவில் போன்ற இசையை மங்கள இசை என்கிறோம்; தெய்வீக மங்களை இசை வாயிலாக, இறைவனை உணரலாம்,'' என்றார்.
சிறப்பு நாதஸ்வர இசை நிகழ்ச்சியில், மன்னார்குடி சங்கரநாராயணன், முனைவர் வெங்கடேசனின் நாதஸ்வரம், பூண்டி கணேசன், பெங்களூர் வெங்கடேசனின் தவில் இசை இடம் பெற்றது. திருமெய்ஞானம் ராமநாதன், பாண்டமங்கலம் யுவராஜ் ஆகியோரின் நாதஸ்வரம்; திருக்கடையூர் பாபு, ராமேஸ்வரம் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் தவில் இசையுடன், இன்னிசை நிகழ்ச்சி களைகட்டியது.

