/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய தடகளப் போட்டி சாதித்தோருக்கு பாராட்டு
/
தேசிய தடகளப் போட்டி சாதித்தோருக்கு பாராட்டு
ADDED : ஏப் 26, 2025 11:00 PM

திருப்பூர்: இந்திய வெட்ரன் அத்லெடிக் பெடரேஷன் சார்பில், கர்நாடகா, மைசூர், சாமுண்டிவிஹார் ஸ்டேடியத்தில், ஏப்ரல், 21 - 23 வரை, 44 வது தேசிய மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில், திருப்பூர், கே.செட்டிபாளையம் விவேகானந்தா வித்யாலயா பள்ளி யோகா ஆசிரியை, சுமதி, 40 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் பங்கேற்றார். 100 மீ தடை தாண்டும் ஓட்டம், மும்முறை தத்தித்தாண்டுதல் ஆகிய போட்டிகளில் பங்கேற்று, 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். 400 மீ., ஓட்டத்தில் முதலிடம் பெற்று, தங்கம் வென்றார்.
இந்திய தடகள கூட்டமைப்பு சார்பில், கேரளா, கொச்சி, மஹாராஜாஸ் கல்லுாரியில், ஏப்ரல் 21 - 24 வரை, 28வது தேசிய பெடரேஷன் சீனியர் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி நடந்தது. இதில், திருப்பூர் மாவட்ட தடகள வீராங்கனை ஏஞ்சல்சில்வியா, தமிழகம் சார்பில் பங்கேற்றார். 200 மீ., ஓட்டத்தில், இரண்டாமிடம் பெற்று, வெள்ளி வென்றார்.
தமிழகத்துக்கும், திருப்பூர் மாவட்டத்துக்கும் பெருமை சேர்ந்த பள்ளி ஆசிரியை மற்றும் வீராங்கனையை, திருப்பூர் மாவட்ட தடகள சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட தடகள சங்கத்தினர் பாராட்டினர்.