/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய தடகள போட்டி: 'பிளாட்டோஸ்' மாணவி தேர்வு
/
தேசிய தடகள போட்டி: 'பிளாட்டோஸ்' மாணவி தேர்வு
ADDED : ஜன 25, 2024 06:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : வரும் பிப்., மாதம், குஜராத்தில், 19 வது தேசிய இளையோர் தடகள போட்டி நடக்கவுள்ளது. இதில் பங்கு பெற, திருப்பூர் பிளாட்டோஸ் பள்ளி மாணவியர் தேர்வாகியுள்ளனர்.
பதினாறு வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில், 600 மீ., ஓட்டத்தில் நேத்ரா, 60 மீ., ஓட்டத்தில் பிரேமா மற்றும் ரோமா ஆர் பால் பெண்டத்லான் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். தேர்வான மாணவியர் மற்றும் பயிற்சியாளர்கள் சுரேஷ், சந்தோஷ் ஆகியோரை, பள்ளி தாளாளர் ஹரிகிருஷ்ணன், பள்ளி அறங்காவலர் கிறிஸில்டா லோபஸ், பள்ளி முதல்வர் ஸ்ரீ குமாரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.