/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய மாணவர் படை ஏ.வி.பி. பள்ளியில் துவக்கம்
/
தேசிய மாணவர் படை ஏ.வி.பி. பள்ளியில் துவக்கம்
ADDED : டிச 13, 2025 07:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், காந்தி நகரில் உள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) துவக்க விழா நடந்தது.
ஏ.வி.பி. கல்விக்குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பொருளாளர் லதா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற என்.சி.சி. கோவை மாவட்ட ராணுவப்பிரிவு அதிகாரி தமிழரசன், தேசியக் கொடியேற்றிவைத்து, மாணவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். முன்னதாக ஏ.வி.பி. மெட்ரிக் பள்ளி முதல்வர் கார்த்திக் வரவேற்றார். ஏ.வி.பி. சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் ராஜேஷ் நன்றி கூறினார்.

