/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய குடற்புழு நீக்க விழிப்புணர்வு முகாம்
/
தேசிய குடற்புழு நீக்க விழிப்புணர்வு முகாம்
ADDED : பிப் 09, 2024 11:45 PM

உடுமலை;உடுமலை அருகே பள்ளியில், தேசிய குடற்புழு நீக்க விழிப்புணர்வு முகாம் நடந்தது.
உடுமலை அருகே ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தேசிய குடற்புழு நீக்க விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கலையரசி, மாணவர்களுக்கு குடற்புழு நீக்க நாள் மற்றும் கை கழுவுதல் அவசியம், அதன் முறைகள் குறித்தும் விளக்கமளித்தார்.
உணவு உண்ணும் முன்பும், கழிவறைக்கு சென்று வந்த பின்னரும் கைகளை சுத்தமாக கழுவுதல், திறந்தவெளியில் மலம் கழிக்கக்கூடாது எனவும், மாணவர்ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன. உதவி ஆசிரியர் கண்ணபிரான் நோய்தடுப்பு விழிப்புணர்வு குறித்து விளக்கமளித்தார்.