/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய துப்பாக்கி சுடும் போட்டி; திருப்பூர் மாணவர்கள் அபாரம்
/
தேசிய துப்பாக்கி சுடும் போட்டி; திருப்பூர் மாணவர்கள் அபாரம்
தேசிய துப்பாக்கி சுடும் போட்டி; திருப்பூர் மாணவர்கள் அபாரம்
தேசிய துப்பாக்கி சுடும் போட்டி; திருப்பூர் மாணவர்கள் அபாரம்
ADDED : ஜன 22, 2025 12:17 AM

திருப்பூர்; தமிழகத்தை சேர்ந்த, நிகிடா ஹரிகிருஷ்ணன் (ஷாட் கன்), அமுதன் குமரவேல், மெகரிஸ் ஜெய்ஷா மற்றும் ஆதியா குப்தா (பீப் ைஸட் ரைபிள்) ஆகியோர், துப்பாக்கி சுடும் போட்டியில், 'ரினோவ்டு ஷூட்டர்' என்ற பட்டத்தை பெற்று, தமிழகத்துக்கும், திருப்பூர் மாவட்டத்துக்கும், பெருமை சேர்த்துள்ளனர்.
போட்டியில் பங்கேற்ற, பிளாட்டோஸ் பள்ளியில் பயிலும் தனிஸ்கா செந்தில்குமார் (பிளஸ் 2), 'ஷாட் கன்' பிரிவில், தேசிய அளவில், 3வது இடத்தை பெற்று, வெண்கல பதக்கம் வென்றுள்ளார்; இவர், நான்காவது முறையாக, 'ரினோவ்டு ஷூட்டர்' இந்தியன் ஸ்குவாடு அணிக்கு விளையாட தேர்வாகியுள்ளார்.
மாணவி பிரேமா, 14 மற்றும் 16 வயதுக்கு உட்பட்டோர் 'பென்டத்லான்' மற்றும் 60 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில், மாநில அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 100 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடம் பிடித்து, வெண்கல பதக்கம் வென்று, 50 ஆயிரம் ரூபாய் பரிசும் வென்றுள்ளார்.
இந்நிலையில், பல்வேறு போட்டிகளில் வெற்றிவாகை சூடிய வீரர், வீராங்கனைகள், கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார், 'பிளாட்டோஸ் ரைபிள் கிளப்' செயலாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் பயிற்சியாளர்கள் தனசேகர், சுரேஷ்குமார் உடனிருந்தனர்.