/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய ஒற்றுமை தினம்: மாணவியர் உறுதிமொழி
/
தேசிய ஒற்றுமை தினம்: மாணவியர் உறுதிமொழி
ADDED : நவ 01, 2025 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில், என்.எஸ்.எஸ். சார்பில் தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.
கல்லுாரி முதல்வர் வசந்தி தலைமை வகித்தார். 'தேசிய ஒற்றுமை தின' உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதில் மாணவியர் இந்திய நாட்டின் ஒற்றுமை, நேர்மை, பாதுகாப்புக்கு தன்னை அர்ப்பணித்துக் கொள்வேன் என்றும், ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் பதிய முயற்சிப்பேன் என்றும், சர்தார் வல்லபபாய் படேல் வலியுறுத்திய தேசிய ஒற்றுமை கொள்கையை கடைபிடித்து, சொந்த பங்களிப்பை வழங்குவேன் என்றும் உறுதிமொழி எடுத்தனர்.
நிகழ்ச்சியை என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர்கள் ஒருங்கிணைத்தனர்.

