sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தேசிய வாக்காளர் தின வினாடி - வினா; மாநில அளவில் திருப்பூர் முதலிடம்

/

தேசிய வாக்காளர் தின வினாடி - வினா; மாநில அளவில் திருப்பூர் முதலிடம்

தேசிய வாக்காளர் தின வினாடி - வினா; மாநில அளவில் திருப்பூர் முதலிடம்

தேசிய வாக்காளர் தின வினாடி - வினா; மாநில அளவில் திருப்பூர் முதலிடம்


ADDED : நவ 19, 2024 07:02 AM

Google News

ADDED : நவ 19, 2024 07:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; தேசிய வாக்காளர் தின வினாடி - வினா போட்டியில், மாநில அளவில், திருப்பூர் மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.

வரும், 2025 ஜன., 25ம் தேதி தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, தேர்தல் கமிஷன் சார்பில், தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, சுவர் ஓவியம், வினாடி - வினா, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டுவருகிறது. மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகள் வெற்றிபெறுவோருக்கு, மாநில அளவில் போட்டி நடத்தப்படுகிறது.

அவ்வகையில், மாநில அளவிலான வினாடி - வினா போட்டிகள் காணொலி காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. கிருஷ்ணகிரி, விழுப்புரத்திலிருந்து தலா 2 பள்ளி அணிகள்; ராமநாதபுரம் மற்றும் திருப்பூர் மாவட்டத்திலிருந்து தலா ஒரு அணி, என, மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில், அம்மாபாளையம் ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலயா மாணவர்கள் ஹர்ஷன் - பிரீத்தி அணியினர், கலெக்டர் அலுவலக வீடியோ கான்பரன்ஸ் அரங்கிலிருந்து போட்டியில் பங்கேற்றனர். ஆறு சுற்றுக்களாக போட்டி நடைபெற்றது. வினாடி - வினாவில், தேர்தல், பொது அறிவு, தமிழ் சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டன. 45 புள்ளிகளுடன், திருப்பூர் மாணவர்கள் ஹர்ஷன் - பிரீத்தி அணியினர் மாநில அளவில் முதலிடம் பிடித்தனர். 35 புள்ளிகளுடன் விழுப்புரம் மாணவர்கள் ஹேமாதேவி - தியானேஷ் அணி இரண்டாமிடம்; கிருஷ்ணகிரி மாணவர்கள் ராகேஷ் - ரோஷன் அணி மூன்றாமிடம் பிடித்தனர்.

வாக்காளர் தின வினாடி வினா போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, தேசிய வாக்காளர் தினத்தன்று, கவர்னர் பரிசு மற்றும் பாராட்டு சான்று வழங்கப்பட உள்ளது.

மாநில அளவிலான வினாடி - வினா போட்டியில் முதலிடம் பிடித்த திருப்பூர் மாணவர்களை, கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us