/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நவராத்திரியும், கலை விழாவும்: கோவில்களில் கோலாகலம்
/
நவராத்திரியும், கலை விழாவும்: கோவில்களில் கோலாகலம்
நவராத்திரியும், கலை விழாவும்: கோவில்களில் கோலாகலம்
நவராத்திரியும், கலை விழாவும்: கோவில்களில் கோலாகலம்
ADDED : அக் 04, 2024 12:32 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்திலுள்ள கோவில்களில் நவராத்திரி விழா நேற்று முதல் துவங்கியது. பல இடங்களில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் துவங்கியது.
உலகில் தீமைகளை அழித்து, நன்மையை பாதுகாக்க, அம்பிகை தவம் இருந்த காலமே, நவராத்திரி என்று ஆன்மிக சான்றோர் அறிவுறுத்தி உள்ளனர். மகாதுர்க்கை, மகாலட்சுமி, மகாசரஸ்வதி என முப்பெரும் தேவியை வழிபட்டு, வீரம், செல்வம், கல்வி ஆகிய வரங்களை பெறுவதே நவராத்திரி வழிபாட்டின் தாத்பரியமாக உள்ளது.
நவராத்திரி நேற்று முதல் கோவில்களில் துவங்கிது. கோவில்களில் கொலு வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், வீரராகவ பெருமாள் கோவில், அவிநாசி ரோடு சிருங்கேரி சாரதாம்பள் கோவில், கொங்கு மெயின் ரோடு ஓம்சக்தி கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் உட்பட கோவில்களில், நவராத்திரி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நேற்று நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சண்டி ேஹாமம்
திருமுருகன்பூண்டியிலுள்ள திருமுருகநாதசுவாமி கோவிலில், நவராத்திரியை முன்னிட்டு சண்டி ேஹாமம் நேற்று துவங்கியது. கணபதி ேஹாமம், வேத பாராயணம், விக்னேஸ்வர பூஜை, தேவீ மகாத்மிய பாராயண ேஹாமம், பட்டுப்புடவை சவுபாக்கிய திரவியங்களுடன் பூர்ணாகுதி ஆகியன நடைபெற்றது. கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாசாலையில், ேஹாம பூஜைகள் நடைபெறுகின்றன.
கலை விழா
நவராத்திரி என்றாலே கோவில்களில், கலை விழா சிறப்பாக நடைபெறும். அவ்வகயைில், பல கோவில்களில், கலை விழா நேற்று முதல் துவங்கியது.
பிரேமா கல்வி நிறுவனங்கள், திருப்பூர் வடக்கு ரோட்டரி நவராத்திரி விழாக்குழு மற்றும் ஆதீஸ்வரர் டிரஸ்ட் இணைந்து, 32வது ஆண்டு நவராத்திரி கலை விழாவை, திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில் மண்டபத்தில் நடத்துகின்றன.நேற்று மாலை, 7:00 மணிக்கு கலை விழா துவங்கியது. துணை மேயர் பாலசுப்ரமணியம் துவக்கி வைத்து பேசினார்.இதில், திருப்பூர் பிரேமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பார்க் கல்வி நிறுவனங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. நவராத்திரியின் சிறப்புகளை வெளிப்படுத்திய மாணவர்களின் கலை நிகழ்ச்சி, பக்தர்களை கவர்ந்தது.ஈஸ்வரன் கோவில் செயல் அலுவலர் சீனிவாசன், நவராத்திரி விழாக்குழு சேர்மன் சுப்ரமணியன் நன்றி கூறினார். நேற்றைய நிகழ்ச்சிக்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியம், செயலாளர் திருக்குமரன் ஆகியோர், உபயதாரர்களாக இருந்தனர்.
---
பிரேமா கல்வி நிறுவனங்கள், திருப்பூர் வடக்கு ரோட்டரி நவராத்திரி விழாக்குழு, ஆதீஸ்வரர் டிரஸ்ட் இணைந்து, திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவிலில் நேற்று நவராத்திரி கலைவிழாவை துவக்கின. முதல் நாளில் இடம்பெற்ற கலைநிகழ்ச்சி.
வீரராகவப்பெருமாள் கோவிலில் சாய்கிருஷ்ணா நுண்கலைக்கூட மாணவியரின் பரதநாட்டியம் நடந்தது.