/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நவராத்திரி விழா - புரட்டாசி சனிக்கிழமை நிறைவு
/
நவராத்திரி விழா - புரட்டாசி சனிக்கிழமை நிறைவு
ADDED : அக் 13, 2024 05:53 AM

திருப்பூர்: நவராத்திரி விழா கொண்டாட்டத்துடன், புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடும் நேற்றுடன் நிறைவு பெற்றது.
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், பக்தர்கள் விரதம் இருந்து பெருமாளை தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி, புரட்டாசி சனிக்கிழமைகளில், பெருமாள் கோவில்களில் கூட்டம் அலைமோதும்; கடந்த நான்கு வாரங்களாக, சனிக்கிழமை வழிபாடு கோலாகலமாக நடந்தது.
நான்காவது வாரமான நேற்று, திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், அதிகாலை, 6:00 மணிக்கு, ஸ்ரீவீரராகவர், பாண்டியன் கொண்டை கிரீட அலங்காரத்துடன், கருட வாகனத்தில் எழுந்தருளினார். திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, மாலை வரை, கொடிமரம் அருகே வீற்றிருந்து அருள்பாலித்தார்.
மூலவர், கனகவல்லி மற்றும் பூமிதேவி தாயார், ஸ்ரீஅனுமந்தராய சுவாமி, நவரத்தின அங்கி அலங்காரத்தில் ஜொலித்தனர். பக்தர்கள் துளசி மாலை சாற்றி, பெருமாளை வழிபட்டனர்.
அவிநாசி அருகே மொண்டிபாளையம் ஸ்ரீவெங்கடேசப்பெருமாள் கோவில், தாளக்கரை ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், கருவலுார் கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில், அவிநாசி கரிவரதராஜ பெருமாள் கோவில், திருமுருகன்பூண்டி கரிவரதராஜ பெருமாள் கோவில், அவிநாசி காரணப்பெருமாள் கோவில், அனுப்பர்பாளையம் அரங்கநாதபெருமாள் கோவில்.
வேலம்பட்டி வரதராஜ பெருமாள் கோவில், பெருந்தொழுவு பெருமாள் கோவில், மங்கலம் ஆதிகேசவ பெருமாள் கோவில், பெருமாநல்லுார் ஆதிகேசவ பெருமாள் கோவில், கணக்கம்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில், கொடுவாய் விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில்;
கோவில்வழி பெரும்பண்ணை வரதராஜப் பெருமாள் கோவில், வேட்டுவபாளையம் - அக்ரஹாரப்புத்துார் காரணப்பெருமாள் கோவில், சாமளாபுரம் ஸ்ரீவரதராஜபெருமாள் கோவில் என, அனைத்து பெருமாள் கோவில்களிலும், சுவாமி புறப்பாடு, அன்னதானம், மயார் பூஜை வழிபாடுகள் நடந்தது.
----
என்றென்றும் நின் புகழ்பாடி இன்புற்றிருப்போம்!
வெள்ளிக்கவச அலங்காரத்தில், திருமுருகன்பூண்டி கரிவரதராஜ பெருமாள்.
அனுப்பர்பாளையம், அரங்கநாத பெருமாள்.
வெண்ணெய்க்காப்பு அலங்காரத்தில், திருப்பூர், பல்லடம் ரோடு, ஜெய வீர ஆஞ்சநேயர்.
கருட வாகனத்தில் வீதியுலா வந்து அருள் பாலித்த, திருப்பூர் வீரராகவப் பெருமாள்.
வெள்ளிக்கவச அலங்காரத்தில், தொங்குட்டிபாளையம் சுயம்பு காரணப்பெருமாள்.
கோவில்வழி, வரதராஜப் பெருமாள்.
வெள்ளிக்கவச அலங்காரத்தில், விஜயாபுரம், ஒத்தக்கடை ஸ்ரீ கருடேஸ்வரப் பெருமாள்.
ஜீவா காலனி, வெங்கடேசப் பெருமாள்.
கேத்தனுார், ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள்.
அவிநாசி, ஸ்ரீகரிவரதராஜப்பெருமாள்.
----
திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவிலில், பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது.
----
புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பூர், விஜயாபுரம் ஒத்தக்கடை ஸ்ரீ கருடேஸ்வரப் பெருமாள் கோவிலில், கொங்குநாடு விவசாயிகள் கட்சி சார்பில் தலைவர் கொங்கு முருகேசன், செயலாளர் கொங்கு ராஜாமணி உள்ளிட்டோர், அன்னதானம் செய்தனர்.