/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலைகளை வளர்த்த நவராத்திரி விழா; திருப்பூரில் பொழிந்த ஆன்மிக எழுச்சி
/
கலைகளை வளர்த்த நவராத்திரி விழா; திருப்பூரில் பொழிந்த ஆன்மிக எழுச்சி
கலைகளை வளர்த்த நவராத்திரி விழா; திருப்பூரில் பொழிந்த ஆன்மிக எழுச்சி
கலைகளை வளர்த்த நவராத்திரி விழா; திருப்பூரில் பொழிந்த ஆன்மிக எழுச்சி
ADDED : அக் 16, 2024 12:36 AM

திருப்பூர் : திருப்பூர் நகரப்பகுதிகளில், கொரோனா தொற்றுக்கு பின், நவராத்திரி கலை விழா இந்தாண்டு களைகட்டியிருந்தது. கோவில்கள், பொது இடங்கள், வீடுகள் என, போட்டி போட்டுக்கொண்டு, கொலு வழிபாடும், கலை நிகழ்ச்சிகளும் களைகட்டியிருந்தது.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஆதீஸ்வர் டிரஸ்ட், பிரேமா கல்வி நிலையம், திருப்பூர் வடக்கு ரோட்டரி ஆன்மிக பிரிவு சார்பில், ஒன்பது நாட்களும், கொலு வழிபாடு, சிறப்பு பூஜைகள், பள்ளி மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சிகள் விமரிசையாக நடந்தன.
ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலிலும், கொலு வழிபாடு, சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூட மாணவ, மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன.இதேபோல், பல்வேறு நாட்டியப்பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், புதிய எழுச்சியை ஏற்படுத்தியிருந்தது. நவராத்திரி என்பது, பெண்கள் மட்டும் கொலு வைத்து வீடுகளில் வழிபடும் நிலைமாறி, பொதுவான விழாவாக இந்தாண்டு கொண்டாடப்பட்டது.
வீடுகளிலும், அக்கம்பக்கம் உள்ளவர்களை அழைத்து, கூட்டு வழிபாடும், நேர்த்தியான கலை நிகழ்ச்சியும், ஆடல் - பாடல் நிகழ்ச்சிகள் நடத்தியது வியக்க வைத்தது. ஆன்மிகத்துக்கும், வழிபாட்டு சம்பிராயங்களை அடையாளம் காட்டும் பூஜையாக இருந்த நவராத்திரி, இளம் கலைஞர்களை அடையாளம் காட்டும் பண்டிகையாகவும் மாறி உள்ளது.