/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'இல்லம் தேடி ரேஷன் திட்டம் ஸ்கேனிங் முறை வேண்டும்'
/
'இல்லம் தேடி ரேஷன் திட்டம் ஸ்கேனிங் முறை வேண்டும்'
'இல்லம் தேடி ரேஷன் திட்டம் ஸ்கேனிங் முறை வேண்டும்'
'இல்லம் தேடி ரேஷன் திட்டம் ஸ்கேனிங் முறை வேண்டும்'
ADDED : டிச 18, 2025 08:01 AM
திருப்பூர்: 'இல்லம் தேடி ரேஷன் திட்டத்தில், கை விரல் ரேகைக்கு பதிலாக, 'ஸ்கேன்' செய்து பொருட்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க (சி.ஐ.டி.யு.,) நிர்வாகக்குழு கூட்டம், சங்க அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் கவுதமன் தலைமை வகித்தார்.
செயலாளர் மகேந்திரன், பொருளாளர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இல்லம்தேடி ரேஷன் திட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இல்லம் தேடி ரேஷன் திட்டத்தில், வயது முதிர்ந்தவர்களின் கைவிரல் ரேகை, கண் விழி ரேகை விழுவதில்லை; மாற்று ஏற்பாடாக, 'பயோமெட்ரிக்' இல்லாமல், 'ஸ்கேனிங்' முறையில் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலம் முழுவதும் தேங்கியுள்ள சாக்குகளை எடுக்க வேண்டும்.
தாயுமானவர் திட்ட பணிக்கான ஊக்கத்தொகையை விரைந்து வழங்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு, 100 சதவீதம் பொருட்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்; சரியான எடை அளவில் அனுப்ப வேண்டும். வெளிமாவட்ட, வெளிமாநில ரேஷன் கார்டுகளுக்கு வழங்க ஏதுவாக, கூடுதல் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

