நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:உடுமலை வெஞ்சமடையில், நிழற்கூரை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை - பழநி ரோட்டில் விரிவாக்கப்பணிகள் நடந்தன. அப்போது, வெஞ்ச மடையில் இருந்த நிழற்கூரை அகற்றப்பட்டது. பணிகள் முடிந்த பின், மீண்டும் நிழற்கூரை அமைக்கப்படவில்லை.
இதனால், இந்த பஸ் நிறுத்தத்தில் ஏறும் பயணியர், பொதுமக்கள், நிழற்கூரையின்றி வெயிலிலும், மழையிலும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி, வெஞ்சமடையில், நிழற்கூரை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.