/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்டத்தில் ஐந்து இடத்தில் 'நீட்' பயிற்சி மையம் அமைப்பு
/
மாவட்டத்தில் ஐந்து இடத்தில் 'நீட்' பயிற்சி மையம் அமைப்பு
மாவட்டத்தில் ஐந்து இடத்தில் 'நீட்' பயிற்சி மையம் அமைப்பு
மாவட்டத்தில் ஐந்து இடத்தில் 'நீட்' பயிற்சி மையம் அமைப்பு
ADDED : மார் 30, 2025 10:50 PM
திருப்பூர் மாவட்டத்தில், 5 இடங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
'நீட்' தேர்வு, மே 4ம் தேதி நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் படித்தவர்களில், 385 மாணவ, மாணவியர், 'நீட்' தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பித்துள்ளனர். மாணவ, மாணவியர் வசதிக்காக, திருப்பூர் மாவட்டத்தில், ஐந்து இடங்களில் பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
அவிநாசி, திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு மற்றும் ஊத்துக்குளி ஒன்றியங்களை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, திருப்பூர் ஜெய்வாபாய் மற்றும் கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளி, தாராபுரம், மூலனுார், குண்டடம் மற்றும் வெள்ளகோவில் ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு, தாராபுரம் என்.சி.பி., ஆண்கள் நகரவை பள்ளியில் நீட் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொங்கலுார், காங்கயம், பல்லடம் ஒன்றியங்களுக்கு, பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி; உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியங்களுக்கு, உடுமலை ஆர்.கே.ஆர்., மேல்நிலைப்பள்ளி ஆகிய ஐந்து இடங்களில், நீட் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக, கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -