/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சந்தை வாய்புகளை வலுப்படுத்த... ஆயத்த ஆடை தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட 'மேக் இன் இந்தியா'
/
சந்தை வாய்புகளை வலுப்படுத்த... ஆயத்த ஆடை தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட 'மேக் இன் இந்தியா'
சந்தை வாய்புகளை வலுப்படுத்த... ஆயத்த ஆடை தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட 'மேக் இன் இந்தியா'
சந்தை வாய்புகளை வலுப்படுத்த... ஆயத்த ஆடை தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட 'மேக் இன் இந்தியா'
ADDED : செப் 27, 2024 11:31 PM
திருப்பூர்: ''மேக் இன் இந்தியா திட்டம், ஆயத்த ஆடை தொழில் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது,'' என, ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி திறன் கவுன்சில் தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி திறன் கவுன்சில் தலைவர் சக்திவேல் கூறியதாவது:
'மேக் இன் இந்தியா' திட்டம் இந்தியாவை உலகளாவிய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் தொழில் சந்தையில், உயர்ந்த இடத்தில் நிலைநாட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதிலும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும் சிறப்பு கவனம் செலுத்தி, கோடிக்கணக்கான மக்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
தொழில்துறை தேவைகளை நிறைவேற்றும் வகையிலும், வளர்ச்சியை ஊக்குவிக்கவும், திறன் கவுன்சிலில், திறன் வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்கி வருகிறோம்.
ஆயத்த ஆடை வர்த்தகம்
'மேக் இன் இந்தியா' திட்டத்தால், நமது நாட்டின் ஆயத்த ஆடை வர்த்தகப்பிரிவு வலுப்பெற்றுள்ளது. இந்திய ஆடைகள் துறை, 'மேக் இன் இந்தியா' திட்டத்தில், அதிகம் பயனடைந்துள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்கி, ஏற்றுமதி வளர்ச்சிக்கு முக்கியமாக பங்களித்து வருகிறது.
வியாபாரத்துக்கு சாதகமான சூழலை உருவாக்கியதன் மூலமாக, நமது நாடு ஆடை உற்பத்திக்கு உகந்த நாடாக மாறியுள்ளது. உலகளாவிய போட்டியை சமாளித்து, ஏற்றுமதி வர்த்தகம் மேம்பட்டுள்ளது.
15 லட்சம் தொழிலாளர்
ஆயத்த ஆடை துறையில், திறமை வாய்ந்த தொழிலாளருக்கான தேவை அதிகம்; திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் ஆதரவு அமைச்சகத்தின் கீழ், ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி தொழில் திறன் கவுன்சில் மூலமாக, தொழில்முறை பயிற்சி மற்றும் சான்றளிப்பு திட்டங்களை வழங்கி வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில், 15 லட்சம் தொழிலாளர்களுக்கு, திறன் பயிற்சி அளித்துள்ளோம். உற்பத்தி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க, திறமையான பணியாளர்களை வழங்கி வருகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.