ADDED : ஜன 24, 2026 04:40 AM

அ நிறம் | அளவு
பல்லட: பல்லடம், என்.ஜி.ஆர்.ரோடு, காமராஜர் திடலில், அனைத்து வணிகர் சங்கம் மற்றும் வியாபாரிகள் சார்பில், நேற்று நேதாஜியின், 129வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
பல்லடம் வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் கண்ணையன் தலைமை வகித்தார். முன்னாள் வி.ஏ.ஓ., பாலசுப்பிரமணியம், சமூக ஆர்வலர்கள் ஈஸ்வரன், செல்வராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை வரவேற்றார்.
முன்னதாக, நேதாஜிக்கு அனைவரும் புகழஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, அவரது உருவப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
