ADDED : பிப் 16, 2026 05:41 AM
திருப்பூர்: தாராபுரத்தில் புதிய வழித் தட மற்றும் புதிய பஸ்கள் இயக்கத்தை அமைச் சர்கள் துவக்கி வைத்தனர்.
தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தாராபுரம் வழியாக புதிய பஸ்கள் இயக்கத்தையும், புதிய வழித்தடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கத்தையும், அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் துவங்கிவைத்தனர். அதில், திருப்பூரிலிருந்து தஞ்சை, மதுரை, திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டைக்கும்; கோவையிலிருந்து பழநிக்கும் புதிய பஸ்கள் இயக்கம் துவங்கி வைக்கப்பட்டது.
மேலும், தாராபுரம் முதல் கொங்கூர் வழியாக அலங்கியம் பகுதிக்கும், ரெட்டாரவலசு, கணியூர் வழியாக பொன்னிவாடிக்கும், ஆச்சியூர் வழியாக காட்டம்பட்டிக்கு கூடுதலாக புதிய வழித்தடத்தில் டவுன் பஸ்களும் துவங்கி வைக்கப்பட்டது.
ஈரோடு எம்.பி.பிரகாஷ், போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் முத்துக்குமாரசாமி, அலுவலர்கள் ஜோதி மணிகண்டன், சேதுபதி, கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
