/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூண்டி - கோவில்வழி இடையே புதிய புறவழிச்சாலை! மாநகரில் நெரிசல் குறைய வாய்ப்பு
/
பூண்டி - கோவில்வழி இடையே புதிய புறவழிச்சாலை! மாநகரில் நெரிசல் குறைய வாய்ப்பு
பூண்டி - கோவில்வழி இடையே புதிய புறவழிச்சாலை! மாநகரில் நெரிசல் குறைய வாய்ப்பு
பூண்டி - கோவில்வழி இடையே புதிய புறவழிச்சாலை! மாநகரில் நெரிசல் குறைய வாய்ப்பு
ADDED : ஏப் 03, 2025 05:55 AM

திருப்பூர்; திருப்பூர் மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, திருமுருகன்பூண்டி - கோவில்வழி இடையே புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.
திருப்பூர் மாநகரம், 159.45 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. மாநகரப் பகுதியில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், 55 கி.மீ.,க்கு அமைந்துள்ளன. நான்கு மண்டலத்தில், 60 வார்டுகளில், 1,265 கி.மீ., நீள சாலைகள் பயன்பாட்டில் உள்ளன.
திருப்பூரில் இருந்து அவிநாசி, பெருமாநல்லுார், பல்லடம், தாராபுரம் செல்லும் ரோடுகள் நெரிசல் மிகுந்ததாகவும், ஊத்துக்குளி, காங்கயம், மங்கலம் ரோடுகள் சற்று நெரிசல் குறைந்ததாகவும் உள்ளன.
நடக்கக்கூட வழி இல்லை
'பீக்ஹவர்' தருணங்களில், பரபரப்பான சாலைகளில் ஏற்கனவே ஊர்ந்து கொண்டிருக்கும் வாகனங்களுடன், வெளியில் இருந்து நகருக்குள் நுழையும் வாகனங்களும் இணைவதால், சாலையே இருப்பு கொள்ள முடியாதபடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. கனரக வாகனங்களை விட, டூவீலர் பெருக்கம் என்பதால், பாதசாரிகள் சாலையோரம் கூட நடக்க முடியாத நிலை உள்ளது.
மாநகருக்குள் நாளுக்குள் நாள் ஏற்படும் நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர, ஒரே வழித்தடத்தில் நுழையும் வாகனங்களை புறவழிச்சாலை வழியாக மாற்று வழித்தடத்தில் திருப்பி விட திட்டமிடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, திருமுருகன்பூண்டி - கோவில்வழி இடையே புதிய புறவழிச்சாலை அமைக்க கருத்துரு தயாராகி வருகிறது. விரிவான திட்ட அறிக்கை மற்றும் மதிப்பீடு ஆய்வு பணிகளுக்கு நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.
விரிவான திட்ட அறிக்கை
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
திருப்பூரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நெரிசலை குறைக்க, நகருக்குள் வரும் வாகனங்கள் வழித்தடத்தை மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. தொடர் கணக்கெடுப்புகளில் அவிநாசியில் இருந்து பல்லடம் மற்றும் கோவில்வழிக்கு செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், அவிநாசி - மங்கலம் - பல்லடம் சாலையை அகலப்படுத்தவும், திருமுருகன்பூண்டி - கோவில்வழி இடையே புதிய புறவழிச்சாலை அமைக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. புறவழிச்சாலைக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, கருத்துரு அனுப்பி வைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
முதல் கட்ட பணிகளுக்கு மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சட்டசபையிலும் அறிவிப்பு வெளியானது. எவ்வளவு துாரம், சாலையின் நீள, அகலம் குறித்து தொடர் ஆய்வுகளுக்கு பின் முடிவெடுக்கப்படும். தற்போது, ஆரம்ப கட்ட பணிகள் முதல்நிலையில் உள்ளது, என்றனர்.
அவிநாசியில் இருந்து பல்லடம் மற்றும் கோவில்வழிக்கு செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

