UPDATED : ஜூன் 03, 2026 11:38 PM
ADDED : ஜூன் 03, 2026 09:21 PM
திருப்பூர்;கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. புது யூனிபார்ம், புது பேக், புது புத்தகங்கள் எனப் பள்ளிக்குக் கிளம்பத் தயாரான குட்டீஸ், தங்கள் எதிர்பார்ப்புகளையும், விருப்பங்களையும் மழலை மாறா மொழியில் நம்முடன் பகிர்ந்துகொண்டனர்.
ஸ்மார்ட் கிளாஸ் ஆர்வம்-
சாதன்யா, 4ம் வகுப்பு, செவந்தாம்பாளையம்:
பள்ளி நாட்கள்ல ஸ்மார்ட் கிளாஸ், கம்ப்யூட்டர் எல்லாம் ஜாலியா யூஸ் பண்ணுவோம். லீவுல அதெல்லாம் எங்கள விட்டுத் துாரமா போன மாதிரி இருந்துச்சு. இன்னைக்கு ஸ்கூலுக்குப் போன உடனே, எப்ப ஸ்மார்ட் கிளாஸ்க்கு கூட்டிட்டுப் போவாங்கன்னு ஆர்வமா இருக்கு. என்னோட பிரண்ட்ைஸயும் இன்னைக்குப் பார்த்திருவேன்!
நல்ல பிரண்ட்டா பிடிக்கணும்
-
வர்ஷிதா, முதல் வகுப்பு, தோட்டத்துப்பாளையம்:
பிரண்ட்ஸ் எல்லாரையும் பார்த்து ரொம்ப நாளாச்சு. இன்னைக்கு எல்லாரும் ஸ்கூலுக்கு வந்துடுங்க. புதுசா யாராவது சேர்ந்திருந்தா அவங்களும் வருவாங்க. முதல்லயே ஒரு நல்ல பிரண்டா நாம பிடிச்சு வச்சுக்கணும். இவ்வளவு நாள் ஜாலியா இருந்துட்டோம், இனிமே டெய்லி ஹோம்வொர்க் எழுதணுமே!
சாக்லேட், பலுான் தருவாங்க!
- தர்ஷன், முதல் வகுப்பு, நெருப்பெரிச்சல்:
எங்களுக்கு அதே மிஸ்தான் வருவாங்கன்னு நினைக்கிறேன். ஒருவேளை வேற டீச்சர் மாறியிருந்தா அவங்க யாருன்னு இன்னைக்குத் தெரிஞ்சிடும். புது யூனிபார்ம் போட்டு பர்ஸ்ட் நாள் ஸ்கூலுக்குப் போறவங்களுக்குச் சாக்லேட், பலுான் எல்லாம் கொடுப்பாங்க. இன்னைக்குச் செம ஜாலியா இருக்கும்!
பெஞ்ச் பிடிக்கணும், மொதல்ல...!
-ருத்ரவேல், 3ம் வகுப்பு, அண்ணா நகர்:
போன வருஷம் எங்ககூட படிச்சவங்க எல்லாம் அதே கிளாஸா, இல்ல வேற ஸ்கூலுக்குப் போயிட்டாங்களான்னு இன்னைக்குத் தெரிஞ்சிடும். எங்களைப் பிரிச்சு வேற வேற கிளாஸ்ல போட்டுட்டாங்களான்னும் தெரியல. புது பிரண்ட்ஸா இருந்தாலும் சரி, எல்லாரும் சேர்ந்து ஒரே பெஞ்சுல இப்பவே சீட் புடிச்சு உட்கார்ந்துக்கணும்.
புது ஊரு... புது ஸ்கூலு
- சாருஹாசினி, இரண்டாம் வகுப்பு, அம்மன் நகர்:
நான் கோபியில படிச்சுட்டு இருந்தேன். அப்பா, அம்மா வேலைக்காகத் திருப்பூருக்கு மாறி வந்துட்டோம். அதனால எனக்கு இது புது ஸ்கூல், புது டீச்சர்! எல்லாரையும் பார்க்க ரொம்ப ஆர்வமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.
டிரஸ் போட்டு பார்த்தாச்சு
நிதர்ஷன், எல்.கே.ஜி., கொங்கு நகர்:
நான் பர்ஸ்ட் டைம் ஸ்கூலுக்குப் போகப் போறேன்னு புது ஸ்கூல் பேக், லஞ்ச் பேக், புது டிபன் பாக்ஸ் எல்லாம் வாங்கித் தந்திருக்காங்க. புது ஷூ, புது டிரஸ்ஸை ரெண்டு தடவை போட்டுப் பார்த்தாச்சு. இன்னைக்கு ஸ்கூலுக்குப் போறதுதான் பாக்கி.
இனி சீக்கிரம் எந்திக்கணுமே!
- லோகிதாஸ்ரீ, 3ம் வகுப்பு, கருவம்பாளையம்:
இதுவரைக்கும் காலையில லேட்டா எந்திரிச்சு, மெதுவா குளிச்சு, தலை சீவி ரெடியானா போதும். ஆனா, இன்னைல இருந்து சீக்கிரமே எந்திரிச்சு ரெடியானாதான் அவசரமில்லாம ஸ்கூலுக்குப் போக முடியும்னு அம்மா சொன்னாங்க. அதுக்காகத்தான் இப்ப ரெடியாகிட்டு இருக்கேன்.
