/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிய பால் பண்ணை 'ஆவின்' திட்டம்
/
புதிய பால் பண்ணை 'ஆவின்' திட்டம்
ADDED : ஏப் 18, 2025 11:35 PM
திருப்பூர்: பால்வளத்துறை மற்றும் ஆவின் செயல்பாடுகள் குறித்த திறனாய்வு கூட்டம் திருப்பூரில் நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசியதாவது:
பால் கொள்முதலில் கவனம் செலுத்துவது, செயலிழந்த சங்கங்களுக்கு புத்துயிர் ஊட்டுவது, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் இல்லாத கிராம பஞ்சாயத்துகளில், புதிய சங்கங்களை பதிவு செய்வது மற்றும் பால் சேகரிப்பு மையங்கள் ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பணிகள் ஊக்குவிக்கப்படும்.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாயிலாக புதிய மகளிர் கூட்டுறவு சங்கங்களை பதிவு செய்வது, மாவட்டத்தில் உள்ள அனைத்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கும் அரசு திட்டங்கள் வாயிலாக, புதிய கட்டட வசதி ஏற்படுத்தி தருவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பூர் ஆவினுக்கு புதிதாக பால் பண்ணை ஏற்படுத்தவும், அடிமனை வசதியை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊத்துக்குளி பகுதியில், வெண்ணெய் உற்பத்தி அலகு ஏற்படுத்தும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இவ்வாறு, அவர் பேசி னார். ஆவின் பொது மேலாளர் சுஜாதா பங்கேற்றார்.

