/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தி.மு.க., புதிய உறுப்பினர்கள் இன்று உறுதிமொழியேற்பு
/
தி.மு.க., புதிய உறுப்பினர்கள் இன்று உறுதிமொழியேற்பு
தி.மு.க., புதிய உறுப்பினர்கள் இன்று உறுதிமொழியேற்பு
தி.மு.க., புதிய உறுப்பினர்கள் இன்று உறுதிமொழியேற்பு
ADDED : செப் 14, 2025 11:46 PM
திருப்பூர்; திருப்பூரில் அமைச்சர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: ஓரணியில் தமிழ்நாடு திட்டம் மூலம் தாராபுரம் தொகுதியில் 44,088 குடும்பங்கள்; காங்கயத்தில், 46,161; உடுமலையில் 45,021; மடத்துக்குளத்தில் 46,488 குடும்பங்கள் இணைந்துள்ளன.
கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதிகளில் மொத்தம் உள்ள 5,30,038 வாக்காளர்களில் 2,34,842 பேர்; தெற்கு மாவட்டத்தில் உள்ள 2 தொகுதிகளில் உள்ள 5,09,013 வாக்காளர்களில் 2,25,815 பேரும் தி.மு.க. உறுப்பினராக தங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த உறுப்பினர்கள் 15ம் தேதி(இன்று) உறுதிமொழி ஏற்கவுள்ளனர். வரும் 17ல் கரூரில் மாநாடும், 20 முதல் மாவட்ட வாரியாக பொதுக்கூட்டமும் நடக்கிறது, என்றார். தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர்பத்மநாபன் உடனிருந்தார்.