/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள்
/
அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள்
அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள்
அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள்
ADDED : அக் 28, 2024 05:54 AM
திருப்பூர் : அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்துக்கான புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின், (2024- -2027)- அகில இந்திய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல், திருப்பூரில் கடந்த இரண்டு நாட்கள் நடந்தது.
ஆயிரம் வைசியா திருமண மண்டபத்தில் நடந்த தேர்தலில், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுடில்லி, தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த, 26ம் தேதி காலை, தமிழ்நாடு ஐயப்ப சேவா சங்க மாநிலத் தலைவர் ஐயப்பன் சங்க கொடியை ஏற்றி வைத்தார். திருப்பூர் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். தொடர்ந்து, 2024 - -2027-ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
தேர்தல் அதிகாரியாக, சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் ரகுநாதன் செயல்பட்டார். நேற்று காலை, விண்ணப்பம் பெற்று சரிபார்க்கப்பட்டது. போட்டி யிடும் நிர்வாகிகள், ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
அகில பாரத ஐயப்ப சேவா சங்க அகில இந்திய தலைவராக சங்கீத்குமார், பொதுச் செயலாளராக வக்கீல் விஜயகுமார், பொருளாளராக கிருஷ்ண நாயர் தேர்வு செய்யப்பட்டனர்; துணைத்தலைவர்களாக ஆறு பேர்; செயலாளராக ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
செயலாளர்களில், திருப்பூரை சேர்ந்த ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்; மத்திய செயற்குழு உறுப்பினர் 25 பேரில், திருப்பூரை சேர்ந்த வெங்கிட்டுசாமி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.