/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நொய்யலில் புது வெள்ளம் : திருப்பூர் மக்கள் உற்சாகம்
/
நொய்யலில் புது வெள்ளம் : திருப்பூர் மக்கள் உற்சாகம்
நொய்யலில் புது வெள்ளம் : திருப்பூர் மக்கள் உற்சாகம்
நொய்யலில் புது வெள்ளம் : திருப்பூர் மக்கள் உற்சாகம்
ADDED : அக் 21, 2025 11:01 PM

திருப்பூர்: கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால், நொய்யலில் நேற்று மிதமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கோடை மற்றும் தென்மேற்கு பருவத்தில் மழை பெய்ததால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து ஒரு மாதம் வரை, வெள்ளம் சென்றதால் நொய்யலாறு துாய்மையாக காணப்பட்டது. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின், நேற்று முன்தினம் இரவில் இருந்து நொய்யலில் மிதமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமானதால், கோவை மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, திருப்பூர் பகுதி களில் உள்ள சிறிய தடுப்பணைகளில், புதிய வெள்ளம் உற்சாகமாக ஆர்ப்பரித்து ஓடிக்கொண்டிருக்கிறது.
தீபாவளி பண்டிகை நேரத்தில், தொடர்மழை பெய்து ஆற்றிலும் மிதமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பொதுமக்கள் நொய்யலை பார்த்து ரசித்தபடி சென்று வருகின்றனர்.