
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம், : பல்லடம் அடுத்த, சித்தம்பலம் நவக்கிரக கோட்டையில், அமாவாசையை முன்னிட்டு, மகா மிருத்யுஞ்ஜய வேள்வி வழிபாடு நடந்தது. 108 சங்குகள் வைத்து பூஜிக்கப்பட்டு, நவகிரகங்கள் மற்றும் சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் தம்பதி சமேதராக சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வெங்கிட்டாபுரம் அதர்வண பத்ரகாளி பீடத்தில், மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு, உலக அமைதி வேண்டி நிகும்பலா யாகம் நடந்தது. வரமிளகாய் மூலம் நடந்த வேள்வி வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.
இதையடுத்து, சிறப்பு தங்க கவச அலங்காரத்தில், ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.