/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தினமும் புதிய வாய்ப்பு' மாணவிகள் ஊக்குவிப்பு
/
'தினமும் புதிய வாய்ப்பு' மாணவிகள் ஊக்குவிப்பு
ADDED : ஜூன் 27, 2025 11:47 PM

திருப்பூர்; திருப்பூர், மங்கலம் ரோடு, குமரன் மகளிர் கல்லுாரியில், இளங்கலை பட்டப்படிப்பில் இணைந்த, முதலாம் ஆண்டு மாணவியரை வரவேற்கும் விதமாக, 'கனவு மெய்ப்பட' எனும் தலைப்பில், வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் தொடர் அலுவலர் கார்த்திகைச்செல்வி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் வசந்தி வரவேற்றார். முதலாம் ஆண்டு துவக்க விழா அறிமுகமாக, புதியதாக கல்லுாரியில் இணைந்த இளங்கலை முதலாம் ஆண்டு மாணவியர் குத்துவிளக்கேற்றினார்.
எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரி வணிகவியல் துறை இணை பேராசிரியர் (ஓய்வு) நாகநந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ''எந்த இடத்திலும் தமிழில் வணக்கம் சொல்லி பேசி பழகுங்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களை மதிப்பார்கள்.
ஆக்கம், ஊக்கம், தியாகம் உள்ளிட்ட நற்பண்புகளை கொண்ட கல்லுாரியில் இணைந்துள்ளீர்கள். ஒவ்வொரு நாளையும் ஒரு புதிய வாய்ப்பாக பயன்படுத்தி படியுங்கள்,'' என்றார். கல்லுாரி பேரவை பொறுப்பாளர் சுதாதேவி நன்றி கூறினார்.