/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மானிய உர விற்பனையாளருக்கு புதிய 'பாய்ன்ட் ஆப் சேல்' கருவி
/
மானிய உர விற்பனையாளருக்கு புதிய 'பாய்ன்ட் ஆப் சேல்' கருவி
மானிய உர விற்பனையாளருக்கு புதிய 'பாய்ன்ட் ஆப் சேல்' கருவி
மானிய உர விற்பனையாளருக்கு புதிய 'பாய்ன்ட் ஆப் சேல்' கருவி
ADDED : மே 31, 2025 05:25 AM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், உரம் விற்பனையாளர்களுக்கு, புதிய பாய்ன்ட் ஆப் சேல் மெஷின் வழங்கப்படுகிறது.
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் மூலம், விவசாயிகளுக்கு, யூரியா, டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ், பொட்டாஷ் உள்பட உரங்கள் மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. மானிய உர விற்பனையை கண்காணிக்கும்வகையில், சில்லரை உரம் விற்பனையாளர்களுக்கு, பாய்ன்ட் ஆப் சேல் மெஷின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மெஷினில் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு மானிய உரம் வழங்கப்பட்டுவருகிறது. தமிழகத்தில், தற்போது பயன்பாட்டிலுள்ள பாய்ன்ட் ஆப் சேல் மெஷின்கள், மேம்படுத்தப்பட்டு, உரம் விற்பனையாளர்களுக்கு புதிய மெஷின்கள் வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தனியார் உரம் விற்பனையாளர்களுக்கு புதிய பாய்ன்ட் ஆப் சேல் மெஷின்கள் வழங்கப்பட உள்ளன. கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 65 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு, புதிய மெஷின்கள் வழங்கப்பட்டன.
டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், வேளாண் இணை இயக்குனர் சுந்தரவடிவேலு, மங்களூர் கெமிக்கல்ஸ் அண்டு பெர்டிலைசர் என்கிற உரம் உற்பத்தி நிறுவன பிரதிநிதி சாந்தகுமார் ஆகியோர், கூட்டுறவு சங்கத்தினருக்கு மெஷினை வழங்கினர்.
தமிழக உர விற்பனையாளர்களுக்கு மெஷின் வழங்கிவரும் மங்களூரு கெமிக்கல்ஸ் அண்டு பெர்டிலைசர் நிறுவன பிரதிநிதி சாந்தகுமார் கூறியதாவது:
தற்போது பயன்பாட்டிலுள்ள உரம் விற்பனைக்கான மெஷினில் சில குறைபாடுகள் உள்ளன. ஆன்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டம், ஜி.பி.எஸ்., தொழில்நுட்பம், கார்டு ஸ்வைப்பிங் உள்ளிட்ட வசதிகளுடன், புதிய மெஷின் உருவாக்கப்பட்டு, உரம் விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
உரக்கடைகளுக்கு எந்தந்த உரம் எவ்வளவு மூட்டை வந்து சேர்ந்தது என்பது முதல், எந்த கடையில், எந்த விவசாயிக்கு எவ்வளவு மூட்டை மானிய உரம் வழங்கப்பட்டுள்ளது என்கிற விவரம், மத்திய அரசுக்கு நேரடியாக பகிரப்படும்.
உரம் விற்பனை, இருப்பு விவரங்களை உயர்மட்ட அதிகாரிகள் வரை, கண்காணிக்க முடியும். இதனால், குறிப்பிட்ட உரத்துக்கான தேவை, தட்டுப்பாடு விவரங்களை உடனுக்குடன் தெரிந்து, அதற்கேற்ப விற்பனையாளர்களுக்கு வழங்கலாம்.
திருப்பூர் மாவட்டத்தில், தொடக்க வேளாண் கூட் டுறவு சங்கங்கள், தனியார் சில்லரை உரம் விற்பனையாளர்கள் 452 பேருக்கு புதிய மெஷின் வழங்கப்பட உள்ளது, என்றார்.