/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேலை உறுதி திட்டத்தில் புதிய குளத்திற்கு பட்டியல்
/
வேலை உறுதி திட்டத்தில் புதிய குளத்திற்கு பட்டியல்
ADDED : மே 13, 2025 11:17 PM
உடுமலை,; தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், கிராமங்களில் குளம் அமைப்பதற்கு இடவசதி தேர்வு செய்யப்படுகிறது.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ஊராட்சிகளில் பல்வேறு பொதுப்பணிகள் நடக்கிறது. ரோடுகளை சீரமைப்பது, குளம் குட்டை திட்டு கட்டுதல், வேளாண் விளைநிலங்களில் வரப்பு அமைத்தல், பாத்தி கட்டுதல், அரசு கட்டடப்பணிகள் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில், புதிய குளம் அமைக்கும் பணிகள் நடப்பாண்டிக்கான வேலை உறுதி திட்டப்பணிகளில், முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
கிராமங்களில் ஏற்கனவே உள்ள குளங்கள் தவிர கூடுதலாக குளம், குட்டை அமைப்பதற்கு இடவசதி குறித்து, ஒன்றிய நிர்வாகங்களில் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது.
ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில், ஒவ்வொரு ஊராட்சியிலும் புதிதாக குளம் அமைப்பதற்கான கிராமங்கள் குறித்து, பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.

