/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்கல் தொகுப்புடன் புது பானை; மண்பாண்ட தொழிலாளர் எதிர்பார்ப்பு
/
பொங்கல் தொகுப்புடன் புது பானை; மண்பாண்ட தொழிலாளர் எதிர்பார்ப்பு
பொங்கல் தொகுப்புடன் புது பானை; மண்பாண்ட தொழிலாளர் எதிர்பார்ப்பு
பொங்கல் தொகுப்புடன் புது பானை; மண்பாண்ட தொழிலாளர் எதிர்பார்ப்பு
ADDED : நவ 14, 2024 11:32 PM

திருப்பூர் ; அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில், தொழிலாளர் உரிமைகள் பாதுகாப்பு குறித்த வாகன விழிப்புணர்வு மாநிலம் முழுக்க நடந்து வருகிறது. நேற்று, திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நடந்தது.
இதன் தொடர்ச்சியாக, நல வாரியத்தில் அங்கம் வகிக்கும், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்கத்தின் மாவட்ட கிளை சார்பில், சங்க தலைவர் ஜெயராமன், செயலாளர் கன்னிமுத்து, பொருளாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலெக்டரிடம் மனு வழங்கிய பின் கூறியதாவது:
பொங்கல் திருநாளில், விவசாய தொழிலாளர்களை வளப்படுத்தும் நோக்கில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, கரும்பு, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் என, பல்வேறு பொருட்கள் வழங்குவது மகிழ்ச்சிக்குரியது.
அதே போல் மண்பாண்ட குலத் தொழிலை மேம்படுத்தும் நோக்கில், மாநில அரசின் சார்பில் பொங்கல் பரிசு தொகுப்புடன் புதுமண் அடுப்பும், புது மண்பானையும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்க வேண்டும். இதன் மூலம் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயரும்.மேலும், தமிழக அரசு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண நிதியாக, 5,000 ரூபாய் வழங்குவதை, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். நல வாரியத்தில் பதிவு செய்து விடுபட்ட மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண நிதி உடனடியாக கிடைக்க ஆவண செய்ய வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் இட ஒதுக்கீடு, சமூகநீதி கிடைக்க செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.