/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிய மின்பகிர்மானம் மின்வாரியம் அறிவிப்பு
/
புதிய மின்பகிர்மானம் மின்வாரியம் அறிவிப்பு
ADDED : ஜன 13, 2024 01:32 AM
திருப்பூர்;திருப்பூர் மின்கோட்டத்தில், பிரபு நகர் மின்பகிர்மானம் புதிதாக உருவாக் கப்பட்டுள்ளதாக, மின்வாரியம் அறிவித்துள்ளது.
திருப்பூர் மின்கோட்டத்தில், ஆர்.வி.இ., நகர் பிரிவு அலுவலகத்தின் ஜெய்நகர் பகிர்மானத்தில் இருந்து, பிரபு நகர் மின்பகிர்மானம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. மின் கணக்கீடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரபு நகர் மெயின் வீதி, பிரபு நகர் 1 முதல் 3 வீதிகள், பிரபுநகர் வடக்குவீதி, ராக்கியாபாளையம் பிரிவு கிழக்கு பகுதி, சினிபார்க் தியேட்டர், ராக்கியாபாளையம் பிரிவு வரையிலான பகுதிகளில், இம்மாதத்தில் இருந்து கணக்கீடு செய்வதும் மாற்றப்படுகிறது.
எனவே, அப்பகுதியை சேர்ந்த மின்நுகர்வோர், மின்சேவைக்காக புதிய மின் இணைப்புகளை பயன்படுத்த வேண்டும். மின் கட்டண அட்டைகளை, அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என, மின்வாரியம் அறிவித்துள்ளது.