ADDED : அக் 21, 2024 04:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : என்.எம்.சி.டி., சேவை நிறுவனம், திருப்பூர் நிட் சிட்டி அரிமா சங்கம், திருப்பூர் சேவா சமிதி சார்பில், தீபாவளி கொண்டாட்டம் திருப்பூர் வஞ்சிபாளையம் ரோட்டில் உள்ள சேவா சமிதியில் நடந்தது. என்.எம்.சி.டி., நிர்வாக அறங்காவலர் சங்கரநாராயணன் வரவேற்றார்.
பல்நோக்கு மாவட்ட, 324 கவுன்சிலர் தலைவர் ராஜேஷ் தேவ் துவக்கி வைத்தார். மாவட்ட ஆளுநர் நித்தியானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஷ் அகமது பாட்ஷா, குழந்தைகள் நல அலகு தலைவர் ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர். ஏராளமான குழந்தைகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் காரங்கள் வழங்கப்பட்டன. உயர் கல்விக்கான காசோலைகளும் வழங்கினர். குழந்தைகளின் கண்வர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.