ADDED : ஜூன் 18, 2026 07:50 AM
திருமுருகன்பூண்டி: ஜூன் 18-: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 கோவில்களுக்குப் புதிய அறங்காவலர்களைநியமிக்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மண்டலத்திற்கு உட்பட்ட (திருப்பூர்மற்றும் கரூர் மாவட்டங்கள்) ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை வருவாய் கொண்ட 14 முக்கிய கோவில்களுக்கான அறங்காவலர் நியமன நடவடிக்கைகளை இணை கமிஷனர் அலுவலகம் தற்போது துவக்கியுள்ளது.
அவிநாசிலிங்கேஸ்வரர்; திருப்பூர் மற்றும் நல்லுார் விஸ்வேஸ்வர சுவாமி; திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி; முத்தணம்பாளையம் அங்காளம்மன்; பிச்சம்பாளையம் மாரியம்மன்; சாமளாபுரம் வாழைத்தோட்டத்து அய்யன்; தாராபுரம் அகஸ்தீஸ்வரர்; செட்டிபாளையம் செல்லாண்டியம்மன்; அவிநாசி நரியம்பள்ளி வரதராஜ பெருமாள்; கடம்பர்கோவில் கடம்பவனேஸ்வரர்; அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர்; கரூர் கல்யாண பசுபதீஸ்வரர்; சிவன்மலை சுப்பிரமணியர் ஆகிய 14 கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
அறங்காவலராகப் பணியாற்ற விரும்பும் ஆன்மிகப் பற்றுள்ள, 25 வயது பூர்த்தியான ஹிந்து சமயத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம்.
அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள், அதாவது ஜூலை 22-ம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
