sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'வந்தே பாரத்' புதிய ரயில் இன்று திருப்பூர் வருகிறது

/

'வந்தே பாரத்' புதிய ரயில் இன்று திருப்பூர் வருகிறது

'வந்தே பாரத்' புதிய ரயில் இன்று திருப்பூர் வருகிறது

'வந்தே பாரத்' புதிய ரயில் இன்று திருப்பூர் வருகிறது


ADDED : நவ 07, 2025 09:44 PM

Google News

ADDED : நவ 07, 2025 09:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: எர்ணாகுளம் - பெங்களூரு சிறப்பு ரயில் (எண்: 06652) இன்று மதியம், 12:32 மணிக்கு திருப்பூர் வருகிறது.

திருப்பூரை கடந்து செல்லும் ரயிலை வரவேற்க ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. திருப்பூரில் ஐந்து நிமிடம் நிற்கும் ரயில், மாலை 5:50க்கு பெங்களூரு சென்றடைகிறது.

கோவையில் புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக சென்னை மற்றும் பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வழித்தடத்தில் புதிய வந்தே பாரத் ரயில் இன்று முதல் இணைய உள்ளது.

எர்ணாகுளம் - பெங்களூரு வந்தே பாரத் ரயில் (எண்:06652) இயக்கத்தை இன்று உ.பி. மாநிலம், வாரணாசியில் இருந்து காணொலி வாயிலாக பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.

அதனை தொடர்ந்து, காலை 8:00 மணிக்கு எர்ணாகுளத்தில் புறப்படும் வந்தே பாரத் சிறப்பு இயக்க ரயில், கோவைக்கு காலை 11:50 மணிக்கும், திருப்பூருக்கு மதியம், 12:32 மணிக்கும் வரும். புதிய வந்தே பாரத் ரயிலுக்கு இரண்டாவது பிளாட்பார்மில், மக்கள் பிரதிநிதிகள் வரவேற்பு அளிக்க உள்ளனர்.

திருப்பூரில் ஐந்து நிமிடம் நிற்கும் ரயில், ஈரோடு, சேலம் வழியாக மாலை, 5:50 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது.






      Dinamalar
      Follow us