/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போதைக்கு எதிராக புத்தாண்டு உறுதிமொழி
/
போதைக்கு எதிராக புத்தாண்டு உறுதிமொழி
ADDED : ஜன 01, 2026 05:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ். அலகு 2 சார்பில் 2026ல் போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பேராசிரியர் தீபக் முன்னிலை வகித்தார். அலகு 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்து பேசினார். பேராசிரியர் சக்தி செல்வம் வாழ்த்துரை வழங்கினார்.
புத்தாண்டை போதையில்லா தமிழகமாக உருவாக்க 'எனக்கும் வேண்டாம், உனக்கும் வேண்டாம், போதை வேண்டாம்' என்று கூறி உறுதிமொழி எடுத்தனர். பேராசிரியர் சந்தனமாரி நன்றி கூறினார்.

