/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிதாக குடி புகுந்துள்ள குடும்பங்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்! அ.தி.மு.க.,வினருக்கு 'அட்வைஸ்'
/
புதிதாக குடி புகுந்துள்ள குடும்பங்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்! அ.தி.மு.க.,வினருக்கு 'அட்வைஸ்'
புதிதாக குடி புகுந்துள்ள குடும்பங்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்! அ.தி.மு.க.,வினருக்கு 'அட்வைஸ்'
புதிதாக குடி புகுந்துள்ள குடும்பங்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்! அ.தி.மு.க.,வினருக்கு 'அட்வைஸ்'
ADDED : நவ 06, 2024 02:57 AM
திருப்பூர்; புதிதாக குடி வந்துள்ள குடும்பங்களை, வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்க உதவ வேண்டுமென, அ.தி.மு.க., வினருக்கு கட்சி நிர்வாகிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியலை சீரமைக்கும், சுருக்கமுறை திருத்த பணி நடந்து வருகிறது. இப்பணிகளை, தேர்தல் கமிஷனை போலவே, ஒவ்வொரு கட்சியினரும், சிறப்பு கவனம் செலுத்தி பங்களிப்பு செலுத்தி வருகின்றன.
பட்டியல் தயாரிப்பு பணியில், அ.தி.மு.க.,வினர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்; பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டுமென, கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து, திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
வரும், 16, 17 மற்றும் 23, 24ம் தேதிகளில், சிறப்பு வாக்காளர் முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் நாட்களில் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டுமென அ.தி.மு.க.,வினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், கட்சியினருக்கு அனுப்பியுள்ள கடிதம்:
ஒவ்வொரு வாக்கும், மிக முக்கியம் என்பதை மனதில் கொண்டு, 18 வயது பூர்த்தியானவர்கள் மற்றும் 17 வயதுக்கு மேற்பட்ட இளைஞர், இளம்பெண்களை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். விடுபட்ட தகுதியான வாக்காளர் மற்றும் புதிதாக குடிவந்த குடும்பங்களை சேர்ந்த வாக்காளர் பெயர்களை, பட்டியலில் இணைக்க வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் இடம்பெற்றுள்ள வாக்காளர், ஒரே தொகுதிக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்துள்ள வாக்காளரை அடையாளம் கண்டு, வரன்முறைப்படுத்த வேண்டும். வெளியூருக்கு இடம்பெயர்ந்தவர், இறந்த வாக்காளர் பெயர்கள் இருந்தால், அவற்றை நீக்கவும் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் ஏதாவது தவறு இருந்தாலும், அவற்றை சரிசெய்ய சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் சரிபார்ப்பு பணியில், ஆளும்கட்சியின் அத்துமீறில் இருப்பது தெரியவந்தால், உடனுக்குடன் தேர்தல் அதிகாரிகளிடம், ஆதாரத்துடன் புகார் அளிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.