ADDED : மார் 04, 2026 05:38 AM

திருப்பூர்: திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில், கல்லுாரிகளுக்கு இடையேயான 'நெக்ஸோரா 26' என்ற தலைப்பில், கலைப் போட்டிகள் நடந்தது.
இதில், மாணவியருக்கான குழு நடனம், மெகந்தி, நக அலங்காரம், டிக் பார் டேக், பிராம்ப் இன்ஜினியரிங், பேஷன் ேஷா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டியில் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து, 20க்கும் மேற்பட்ட கல்லுாரிகளை சேர்ந்த, 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று, தங்கள் திறமையை வெளிக்காட்டினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
திருப்பூர் புனித ஜோசப் மகளிர் கல்லுாரி மாணவியர், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று ஒட்டு மொத்த வெற்றியாளராக, கல்லுாரி கோப்பையை வென்றனர்.
கல்லுாரி நிர்வாக அலுவலர் நிர்மல்ராஜ், துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
