/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை அணிகளுக்கான நிப்ட்-டீ பரீமியர் லீக் கிரிக்கெட்
/
பின்னலாடை அணிகளுக்கான நிப்ட்-டீ பரீமியர் லீக் கிரிக்கெட்
பின்னலாடை அணிகளுக்கான நிப்ட்-டீ பரீமியர் லீக் கிரிக்கெட்
பின்னலாடை அணிகளுக்கான நிப்ட்-டீ பரீமியர் லீக் கிரிக்கெட்
ADDED : ஜூலை 01, 2025 11:46 PM
திருப்பூர்; திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரி நிர்வாகம், 'நிப்ட்-டீ பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களிடையே நல்லுறவை வளர்க்கும் வகையிலும், தொழிலாளர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் விதமாகவும் இந்த போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த, 2015ம் ஆண்டு முதல் இதுவரை, ஆறு போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. ஏழாவது போட்டி, நிப்ட்-டீ கல்லுாரி மைதானத்தில், வரும், 20ம் தேதி துவங்கி நடைபெற உள்ளது. திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி நிறுவன கிரிக்கெட் அணிகள், மோத உள்ளன.
முதலில், 15 ஓவர்களுடன் லீக் போட்டிகளும், காலிறுதி முதல், 20 ஓவர்களுடன் 'நாக்-அவுட்' முறையிலும் போட்டிகள் நடைபெறும். பனியன் தொழிலாளர்கள் பங்கேற்க ஏதுவாக, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கிரிக்கெட் தொடரில், முதலிடம் பிடிக்கும் அணிக்கு, 50 ஆயிரம் ரூபாய், இரண்டாமிடத்துக்கு 25 ஆயிரம் ரூபாய், மூன்று மற்றும் நான்காமிடம் பிடிக்கும் அணிகளுக்கு பரிசுக்கோப்பைகள் வழங்கப்பட உள்ளது. போட்டியில் பங்கேற்கும் அணிகள், https://forms.gle/upuJr1vQGQ86r9937 என்கிற ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்து, முன்பதிவு செய்ய வேண்டும். 95971 54111 என்கிற எண்ணில் தொடர்புகொண்டு கூடுதல் விவரங்கள் பெறலாம்.
யாருக்கு கோப்பை?
கடந்த 2015 ல் நடத்தப்பட்ட முதல் போட்டியில், சி.ஆர்., கார்மென்ட்ஸ் கோப்பையை கைப்பற்றியது. அடுத்தடுத்த ஆண்டுகளில் நடந்த மூன்று போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற்ற ஈஸ்ட்மேன் அணி, சுழற்கோப்பையை சொந்தமாக்கியது. 2021, 2023ல் நடந்த போட்டிகளில் வெற்றிபெற்று, தொடர்ந்து இரண்டு முறை சி.ஆர்., கார்மென்ட்ஸ் அணி, சுழற்கோப்பையை கைப்பற்றி வைத்துள்ளது.