ADDED : மார் 01, 2026 05:39 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: நைஜீரியாவை சேர்ந்த ஜான் கெலிச்சி ஒபோட்டோ, 36, திருப்பூர் காசிபாளையத்தில், வசித்து வந்துள்ளார். முறைகேடாக இங்கு தங்கியிருப்பதாக, நல்லுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசா காலம் முடிந்தும், முறைகேடாக தங்கியிருப் பது தெரியவந்ததால், இவரை கைது செய்தனர்.
கடந்த 2013ல் திருப்பூரில் கள்ள நோட்டு புழக்கத்தில் விட உதவியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. பின் ஜாமினில் வந்தவர், கேரளாவுக்கு சென்றார். 2022ல் போதை பொருட்களை கடத்தி விற்க முயன்றதாக, ஆலப்புழா போலீசாரால் கைது செய்யப்பட்டவர்களில் இவரும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.
