/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீலகிரி கோடை விழா சிறப்பு பஸ் இயக்கம்
/
நீலகிரி கோடை விழா சிறப்பு பஸ் இயக்கம்
ADDED : மே 05, 2025 05:19 AM
திருப்பூர்; நீலகிரியில் கோடை சீசன் துவங்கியுள்ளது கோத்தகிரியில் நேற்று முன்தினமும், நேற்றும், காய்கறி கண்காட்சி நடந்தது.
வரும், 9 - 11 கூடலுாரில் வாசனை திரவிய கண்காட்சி; ஊட்டியில் வரும், 10 - 12 ரோஜா கண்காட்சி, 16 - 21 மலர் கண்காட்சி, குன்னுாரில் 23 - 25 பழக்கண்காட்சி நடக்கவுள்ளது.
ஊட்டி செல்வதற்கு வசதியாக திருப்பூரில் இருந்து, பத்து சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகம் இயக்குகிறது.
'வழக்கமாக ஊட்டி செல்லும் பஸ்களுடன், கூட்ட நெரிசலுக்கு ஏற்ப சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். பயணிகள் குடும்பத்துடன் அல்லது குழுவாக அரசு பஸ்சில் பயணிக்க விரும்பினால், பஸ்சை முழுமையாக முன்பதிவு செய்து பயணிக்கும் வசதியும் உள்ளது. திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் உள்ள தகவல் மையத்தில், பயணிகள் தகவல் அறிந்து கொள்ளலாம், 'என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

