தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'நிட்டெக்' கண்காட்சி 'ஹைடெக்'  கோலாகல துவக்கம்: 'ஏஐ' தொழில்நுட்பம் ஆதிக்கம்

 'நிட்டெக்' கண்காட்சி 'ஹைடெக்'  கோலாகல துவக்கம்: 'ஏஐ' தொழில்நுட்பம் ஆதிக்கம்

 'நிட்டெக்' கண்காட்சி 'ஹைடெக்'  கோலாகல துவக்கம்: 'ஏஐ' தொழில்நுட்பம் ஆதிக்கம்


ADDED : மார் 07, 2026 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 05:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: பின்னலாடை தொழில்சார்ந்த இயந்திரங்கள் அணிவகுத்துள்ள, 'நிட் டெக் -2026', திருமுருகன்பூண்டி ரிங்ரோடு, 'ைஹடெக் திருப்பூர்' கண்காட்சி வளாகத்தில் நேற்று துவங்கியது.

'ைஹ டெக் இன்டர்நேஷனல் டிரேடு பேர்' நிறுவனம் சார்பில், ஜவுளி தொழில்துறையினருக்கான, 18வது, 'நிட் டெக்' கண்காட்சி, நேற்று துவங்கியது. குறிப்பாக, பிரின்டிங், நிட்டிங், சூயிங் என, அனைத்து வகையான பிரிவுகளிலும், 'ஏஐ' தொழில்நுட்பம் சார்ந்த இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டிலேயே முதன் முறையாக, அரசு மானியத்துடன், இயந்திர வடிவமைப்பாளர்கள் கண்காட்சியில் ஸ்டால் அமைத்துள்ளனர். ஐந்து பெரிய அரங்குகளில், 2 லட்சம் சதுரடி பரப்பில், முற்றிலும் குளிரூட்டப்டட்ட வசதியுடன், கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் குழுமியிருக்கும், 19 நாடுகளை சேர்ந்த இயந்திர நிறுவனத்தினர், 360 ஸ்டால்கள், 230க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், 270க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் என, கண்காட்சி நேற்று முதல் களைகட்டியிருக்கிறது.

'ஊசி முதல் பேக்கிங்' வரை உள்ள அனைத்து விதமான நவீன இயந்திரங்களும், கண்காட்சியில், இயங்கும் நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், பருத்தி ஆடையுடன் செயற்கை நூலிழை ஆடை ஏற்றுமதியிலும் முனைப்பு காட்டி வருகின்றனர். அது சம்பந்தமான இயந்திரங்களும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, துருக்கி, ஜெர்மன், இத்தாலி, பிரான்ஸ், கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் சீனா உள்ளிட்ட நாட்டு நிறுவனங்களும் வருகின்றன. நிட்டிங் மெஷின்கள், சாய ஆலைகளில் பயன்படும் 'சாப்ட்புளோ' மெஷின்கள், அதிநவீன தையல் இயந்திரங்கள், 'டிஜிட்டல்' பிரின்டிங் இயந்திரங்கள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் தளவாடங்கள், ஆடை உற்பத்திக்கான உபபொருட்களும் இடம்பெற்றுள்ளன. கண்காட்சி, வரும், 9ம் தேதி வரை, தினமும் காலை, 10:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை நடக்குமென, கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

'ஏஐ' தொழில்நுட்பம் ஒவ்வொரு தொழில்பிரிவுகளிலும், செயற்கை நுண்ணறிவு என்ற 'ஏஐ' தொழில்நுட்பம் கால் பதித்துள்ளது. நிட்டிங் மெஷின்களில், பின்னல் துணி உற்பத்தியை கண்காணிக்கும் வசதி, 'டிஜிட்டல்' பிரின்டிங் மெஷின்களில் பிரின்ட் செய்யப்படும் பிரின்ட்களை தணிக்கை செய்யும் கூடுதல் வசதியுடன் மெஷின்கள் வந்துள்ளன. ஒவ்வொரு மெஷின்களும் இயங்கு நிலையில் இருப்பதுடன், நவீன தொழில்நுட்ப கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளதால், புதிய தொழில்நுட்ப வசதி குறித்து, பார்வையாளர்கள் தெளிவாக கண்டறிய முடிகிறது. ஒவ்வொரு ஸ்டால்களிலும், இந்திய வினியோகிஸ்தர்கள் மட்டுமல்ல, இயந்திர உற்பத்தி நிறுவனங்களின் அதிகாரிகளும், செயல்பாட்டு பிரதிநிதிகளும் உடனிருந்து விளக்கி வருகின்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us