sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நாளை துவங்குகிறது 'நிட்ஜோன்' கண்காட்சி 

/

நாளை துவங்குகிறது 'நிட்ஜோன்' கண்காட்சி 

நாளை துவங்குகிறது 'நிட்ஜோன்' கண்காட்சி 

நாளை துவங்குகிறது 'நிட்ஜோன்' கண்காட்சி 


ADDED : மே 22, 2025 03:50 AM

Google News

ADDED : மே 22, 2025 03:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; பின்னலாடை உற்பத்திக்கான அதிநவீன இயந்திரங்களுடன், 'நிட்ஜோன்' கண்காட்சி, நாளை ( 23ம் தேதி) திருப்பூரில் துவங்குகிறது.

திருப்பூர் பின்னலாடை உற்பத்தியை மேம்படுத்த, புதிய தொழில்நுட்பத்தில் உருவான இயந்திரங்கள், உதிரிபாகங்கள், 'அக்சஸரீஸ்' மற்றும் 'பேப்ரிக்ஸ்' நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சி, 'நிட் ஜோன் எக்ஸ்போ' நிறுவனம் சார்பில், வேலன் ஓட்டல் கண்காட்சி வளாகத்தில், நாளை துவங்கி நான்கு நாட்கள் நடக்கிறது.

இதுகுறித்து 'நிட்ஜோன் எக்ஸ்போ' நிர்வாகிகள் கூறுகையில், 'கண்காட்சியில், நவீன தொழில்நுட்பம் கொண்ட, 'நிட்டிங்', 'டையிங்', 'பிரின்டிங்', 'எம்பிராய்டரி', தையல் மெஷின்கள், உதிரி பாகங்கள், 'அக்சஸரீஸ்' மற்றும் 'பேப்ரிக்ஸ்' இடம்பெறும். மொத்தம், 30 ஆயிரம் சதுரடியில், 250 ஸ்டால்களுடன் கண்காட்சி நடக்கிறது.

இக்கண்காட்சியில், 300 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தக விசாரணை நடக்க வாய்ப்புள்ளது. பின்னலாடை துறையினர், கண்காட்சியை பார்வையிட்டு, நவீன தொழில்நுட்பத்தால் உற்பத்தியை மேம்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு, 95856 61121, 70944 55545, 98430 44332 என்ற எண்கணில் அணுகலாம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us