/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
8ம் வகுப்பு மாணவருக்கு என்.எம்.எம்.எஸ்., தேர்வு
/
8ம் வகுப்பு மாணவருக்கு என்.எம்.எம்.எஸ்., தேர்வு
ADDED : ஜன 24, 2025 03:25 AM
திருப்பூர்; மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்.எம்.எம்.எஸ்.,) கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒன்பது முதல் பிளஸ் 2 வரை மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் இத்திட்டத்துக்கு, ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படுகிறது.
நடப்பு 2025ம் ஆண்டுக்கான தேர்வு, வரும், பிப்., 22ம் தேதி நடக்கிறது. தேர்வுக்கான விண்ணப்ப பதிவு, 2024 டிச., 31ல் துவங்கியது. www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைய கட்டணத்தொகை, 50 ரூபாயை பயிலும், பள்ளி தலைமை ஆசிரியரிடம் மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடிகிறது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்று மாலைக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை மேற்கண்ட இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

