/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விளைநிலத்துக்கு வழித்தடம் இல்லை; விவசாயியின் 32 ஆண்டு போராட்டம்
/
விளைநிலத்துக்கு வழித்தடம் இல்லை; விவசாயியின் 32 ஆண்டு போராட்டம்
விளைநிலத்துக்கு வழித்தடம் இல்லை; விவசாயியின் 32 ஆண்டு போராட்டம்
விளைநிலத்துக்கு வழித்தடம் இல்லை; விவசாயியின் 32 ஆண்டு போராட்டம்
ADDED : மார் 17, 2025 01:49 AM

பல்லடம்; பல்லடம் அடுத்த, ராயர் பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி, 70; விவசாயி. இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் விவசாய பூமி, ராயர்பாளையத்தில் உள்ளது.
பொன்னுசாமி கூறியதாவது:
கடந்த, 32 ஆண்டுக்கு முன், எனக்கு உரிய தகவல் தெரிவிக்காமல், எனது விளைநிலத்தை ஒட்டி பி.ஏ.பி., வாய்க்கால் அமைக்கப்பட்டது. விளை நிலத்துக்குள் வாகனங்கள் செல்வதற்கான போதிய வழித்தடம் இல்லாமல் போனதால், வாய்க்கால் மீது குழாய் அமைத்து பயன்படுத்த அனுமதிக்குமாறு, பல்லடம் பி.ஏ.பி., அதிகாரிகளுக்கு விண்ணப்பித்தேன். நடவடிக்கை இல்லை. முதல்வர் தனிப்பிரிவு, நீர்வளத்துறை அமைச்சர், கலெக்டர், சப் கலெக்டர், தாசில்தார், கோவை பி.ஏ.பி., தலைமை பொறியாளர், பொள்ளாச்சி செயற்பொறியாளர் உட்பட, விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம், ஜமாபந்தியிலும் மனு கொடுத்தேன். கடந்த, 32 ஆண்டுகளாக கொடுத்த மனுக்கள் எக்கச்சக்கம்.
இந்நிலையில் ஒரு மோசடி ஆசாமி, என்னைச் சந்தித்து கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிவதாக கூறி, பிரச்னைக்கு தீர்வு காண்பதாக கூறி, என்னிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டார். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தால், இவ்வாறு, ஏமாறும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டேன். பணத்தை இழந்ததுடன், எனது வயதும் கடந்ததுதான் மிச்சம்.
தற்போது விளை நிலத்தில் சீமை கருவேல் மரங்கள் முளைத்துள்ளன. இனியாவது, மனு மீது நடவடிக்கை எடுத்து, குழாய் அமைக்க அனுமதி தருவார்களா என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.