/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஞ்சலிங்க அருவிக்கு 2வது நாளாக அனுமதியில்லை
/
பஞ்சலிங்க அருவிக்கு 2வது நாளாக அனுமதியில்லை
ADDED : டிச 04, 2024 10:05 PM

உடுமலை; உடுமலை அருகே திருமூர்த்திமலையில், பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. மலைத்தொடரில் உருவாகும் சிற்றாறுகள் வாயிலாக, அருவிக்கு நீர் வரத்து கிடைக்கிறது. மழைக்காலங்களில் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு, அடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் அருகில் கண்காணிப்பு செய்யப்படும்.
நேற்று முன்தினம், திருப்பூர் மாவட்டத்துக்கு, வானிலை ஆய்வு மையத்தால், 'ஆரஞ்ச் அலர்ட்' வெளியிடப்பட்டு, அருவிக்கு செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை. நேற்று காலை மலைத்தொடரில், குருமலை உள்ளிட்ட இடங்களில், மிதமான மழைப்பொழிவு இருந்தது; வானமும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக, பஞ்சலிங்க அருவிக்கு செல்ல சுற்றுலா பயணியர் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கோவிலில் இருந்து அருவிக்கு செல்லும் பாதையில் தடுப்பு வைக்கப்பட்டது.
பக்தர்கள், கோவில் அருகிலுள்ள ஆற்றில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. கோவில் பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.