/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மது அருந்தியிருந்தால் அனுமதியில்லை! இனி, மருத்துவமனையில் சோதனை
/
மது அருந்தியிருந்தால் அனுமதியில்லை! இனி, மருத்துவமனையில் சோதனை
மது அருந்தியிருந்தால் அனுமதியில்லை! இனி, மருத்துவமனையில் சோதனை
மது அருந்தியிருந்தால் அனுமதியில்லை! இனி, மருத்துவமனையில் சோதனை
ADDED : நவ 30, 2024 04:51 AM

திருப்பூர்: 'மது அருந்திவிட்டு மருத்துவமனைக்குள் வருவோர் குறித்து கண்காணிக்கப்படும். மது அருந்திய நபர்கள் மருத்துவ மனைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்,' என, அரசு மருத்துவக் கல்லுாரி டீன் முருகேசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அரசு டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை அடுத்து, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, பொது வார்டுக்கு வந்து செல்வோர், குறிப்பாக உள்நோயாளிகளை பார்க்க, டாக்டரை சந்திக்க வரும் நபர்கள் எவ்வளவு நேரம் வளாகத்துக்குள் இருக்கின்றனர் என்பதை கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனைக்கு நுழைவோருக்கு மூன்று நிறங்களில் பாஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில், மது அருந்தி விட்டு, சிலர் மருத்துவமனை வளாகத்துக்குள் வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்துள்ள மருத்துவக் கல்லுாரி நிர்வாகம், மது அருந்தி விட்டு உள்ளே நுழைவோரை கண்காணித்து, வாயிலிலேயே தடுத்து நிறுத்தி திருப்ப அனுப்ப முடிவு செய்துள்ளது.
இவர்களால், அதிக சுகாதாரக்கேடு சுற்படுவதுடன், சக நோயாளி உடன் இருப்பவர்களுடன் சண்டை, வாக்குவாதம், பிரச்னை ஏற்படுவதால், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி 'டீன்' முருகேசன் கூறுகையில், ''மருத்துவமனையில் பாதுகாவலர்களாக உள்ள சிலரை தேர்வு செய்து அவர்களுக்கு 'ப்ரீத் அனலைசர்' கருவி வழங்கப்படும்.
அவர்கள் மகப்பேறு, குழந்தைகள் வார்டு, பொது வார்டு பகுதி நுழைவு வாயிலில் பணியில் ஈடுபடும்போது, வார்டுக்குள் நுழையும் நபர்கள் மீது சந்தேகம் எழுந்தால், 'ப்ரீத் அனலைசர்' கருவியால் மது அருந்தியுள்ளனரா என்பது குறித்து பரிசோதித்த பின், அனுமதிக்கப்படுவர். வார்டில் சந்தேகிக்கும் நபர்கள் சுற்றித்திரிந்தால், வெளியேற்ற பாதுகாவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.