ADDED : அக் 28, 2025 12:52 AM
திருப்பூர்: திருப்பூர் உழவர் சந்தையில், தீபாவளிக்கு பின் காய்கறி விற்பனைசுறுசுறுப்பாகினாலும், வரத்து இயல்பாக இருப்பதால், விலை உயர்வு இல்லை.அதிகளவில் மக்கள் வாங்கும் தக்காளி, உருளை, முள்ளங்கி, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் விலை உயரவில்லை.
கத்தரி, அவரை கிலோ, 60 ரூபாய். மலைகாய்கறிகள் விலை மட்டும் சற்று உயர்ந்திருந்தது. முருங்கை விலையில் மாற்றமில்லை. தேங்காய் விலை தொடர்ந்து உயர்வாக உள்ளது. ஒரு தேங்காய், 20 ரூபாய்க்கு கிடைப்பது சந்தையிலேயே அரிதாகியுள்ளது.
தெற்கு உழவர் சந்தை விலை நிலவரம்(ஒரு கிலோ): கத்தரிக்காய் - ரூ.60
வெண்டைக்காய் - 50
தக்காளி - 25
பச்சை மிளகாய் - 50
புடலங்காய் - 40
அவரைக்காய் - 60
கொத்தவரங்காய் - 40
பீர்க்கன்காய் - 40
சுரைக்காய் - 20
பாகற்காய் - 40
முள்ளங்கி - 25
தேங்காய் - 65
வாழைக்காய் - 25
எலுமிச்சை - 100
அரசாணி - 30
சாம்பல் பூசணி - 20
வாழைத்தண்டு - 10
வாழைப்பூ - 10
பெ.வெங்காயம் - 20
சி.வெங்காயம் - 50
உருளைக்கிழங்கு - 40
முட்டைகோஸ் - 20
கேரட் - 50
பீன்ஸ் - 60
காலிபிளவர் - 30
மேராக்காய் - 18
இஞ்சி - 70
மல்லித்தழை - 40
கறிவேப்பிலை - 40
புதீனாக்கீரை - 15
முருங்கைக்காய் - 60
பப்பாளி - 30
பொரியல் தட்டை - 30

